என்.ஐ.எப்.டி.,யில் மாணவர் சேர்க்கை
என்.ஐ.எப்.டி.,யில் மாணவர் சேர்க்கை
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ கல்வி நிறுவனத்தில், 2018ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இளநிலைப் பிரிவு: பி.டெஸ்.,- அக்செசரி டிசைன், பேஷன் டிசைன், நிட்வேர் டிசைன், லெதர் டிசைன், பேஷன் கம்யூனிகேஷன் மற்றும் டெக்ஸ்டைல் டிசைன். பி.எப்.டெக்.,- ஆடை தயாரிப்பு.
தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எப்.டெக்., படிப்பில் சேர, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: அக்டோபர் 1, 2017 நிலவரப்படி, 23 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
முதுநிலைப் பிரிவு: மாஸ்டர் ஆப் டிசைன், மாஸ்டர் ஆப் பேஷன் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி.
தகுதி: ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி. மாஸ்டர் ஆப் பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர - பி.இ., பி.டெக்., பி.எப்.டெக்., ஆகிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு: ஜனவரி 21, 2018
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 29, 2017