ஆம். முதல் மற்றும் 2 வது குழுந்தைக்கு எடுத்தது போலவே 3 ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு 365 நாள்கள் ஆகும். அதனை பிரசவத்திற்கு முன்பிருந்தோ அல்லது குழுந்தை பிறந்த நாளிலிருந்தோ எடுத்துக்கொள்ளலாம் . உரிய உயர் அலுவலரிடம் விடுப்பு விவரத்தினை தெரிவிக்கவேண்டும். மீளப் பணியில் சேரும்போது உயர் அலுவலர் அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர இயலும்
Login
https://ifhrms.tn.gov.in -ல் உங்க User ID / Password வைத்து Login பண்ணுங்க
Menu-க்கு போக:
-eServices (HR & Fin) = click செய்யவும்.Employee Self Service icon click செய்யவும் ( Employee Self service icon இல்லையெனில் இடது மூலையில் 3 கோடுகள் இருக்கும் அதனைclick செய்யவும் அதில் Employee self service - Home click செய்யவும் அங்கு தோன்றும் icon களில் others click செய்யவும் Request type Forn No I Movable Property Return என்பதை Click பண்ணுங்க
Form Fill பண்ணுங்க:
- Year: 31.12.2025 வரையிலானது என்பதால் Year - 2025 என Select பண்ணுங்க
- சொத்து வகை:
- அசையா சொத்து - நிலம், வீடு, மனை
- அசையும் சொத்து - கார், பைக், நகை, Bank Balance, கடன்
- ஒவ்வொரு சொத்துக்கும் - வாங்கிய தேதி, மதிப்பு, உங்க பெயரிலா / குடும்ப உறுப்பினர் பெயரிலா என குறிப்பிடணும்
கடன் விவரம்:
- வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் இருந்தால் - கடன் தொகை, வங்கி பெயரை குறிப்பிடணும்
Save & Submit:
- எல்லா விவரத்தையும் சேர்த்த பிறகு Final Submit பண்ணுங்க. Submit பண்ண பிறகு PDF-ஆக Download பண்ணிக்கலாம்.
முக்கிய குறிப்புகள்:
1. கடந்த வருடம் கொடுத்த சொத்துடன் ஒப்பிட்டு, புதிய சொத்து சேர்ந்திருந்தா மட்டும் கூடுதலாக சேர்த்தால் போதும்.
2. சொத்து இல்லை என்றாலும் NIL Return தாக்கல் செய்ய வேண்டும்.
3. Final Submit பண்ணிய பிறகு தான் உங்க DDO / HOD-க்கு போகும்.
கடைசி தேதி: அக்டோபர் 31க்குள் முடிக்கணும். கடைசி நேரத்துல Server Slow-வா இருக்கும், இப்பவே முடிச்சிடுங்க.
மேலும் உங்கள் சந்தேகங்களுக்கு கேள்விகளை இங்கே பதிவிடவும்
Govt Letter DOWNLOAD
அக்.15 லிருந்து ரூ.2,000க்கு மேல் பணம் அனுப்பினால் அதற்கு கட்டணம் பிடிக்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிப்பால், நாடு முழுவதும் UPI பயனாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். ஆனால், எல்வலாருக்கும் கட்டணம் பிடிப்பார்களா என்றால் இல்லை. கடையில் பொருள் வாங்கும்போது பணம் UPI மூலம் செலுத்தினால் கட்டணம் ஏதும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படமாட்டாது.
MDR (Merchant discount rate) இது ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனையிலிருந்து பிடிக்கப்படும் ஒரு சிறிய சதவீதமாகும். இக்கட்டணத்தை வாடிக்கையாளர் செலுத்த வேண்டியது இல்லை வணிகர் அல்லது கடை உரிமையாளரே செலுத்துகிறார். MDR இந்த கட்டணத்தைத் தான் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரிய Shoping Mall போன்ற கடைகளுக்குத் தான் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாதம் 20 இலட்சத்துக்கு மேல் வர்த்தகம் செய்யும் கடைகளுக்கு இந்த MDR கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ. 3,000 எனில் MDR கட்டணம் ரூ. 12
ரூ. 50,000 எனில் MDR கட்டணம் ரூ. 200
ரூ. 75,000 மற்றும் அதற்கும் மேல் எனில்.. கட்டணம் ரூ.300 ரூ. 1 லட்சம் பேமண்ட் பண்ணாலும் ரூ.300 தான் கட்டணம். அதை தாண்டாது.
P2P. (Person to Person)
நண்பர்கள், உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள்(கணவன்/மனைவி, மகன்/மகள், தாய்/தந்தை) அவர்களுக்கு மற்றும் உங்களின் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு UPI மூலம் பணம் அனுப்புவதற்கு கட்டணம் கிடையாது.
P2PM ( Person to Person cum Merchant)
small merchants, பொதுவாக மாததிற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள் , Zero MDR protection லேயே தொடர்வார்கள்.
Mutual fund/Shares வாங்க UPI பயன்படுத்தியால் கட்டணம் 0.02% அதிகபட்சமாக ரூ. 300 செலுத்தவேண்டும். இதுவே Monthly SIP, Autopay இதற்கு கட்டணம் கிடையாது.
Insurance, Fuel போன்ற Payments?
Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க. Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் அல்ல
NHIS பொறுத்த வரையில் கணவன்/மனைவி இருவரும் அரசு வேலையில் இருப்பின் அவர்களில் பணியில்/வயதில் இளையவருக்கு பிடித்தம் செய்யப் பட வேண்டும். சில நேர்வுகளில் இருவருக்கும் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்.அதற்கு காரணம் அரசு பணியில் இருப்பதை IFHRMS ,இல் Entry போடப்படாமல் இருக்கும்.ஓஊ வயதில் இளையவரின் ஊதியத்தில் மட்டுமே பிடித்தம் செய்யப்படவேண்டும் என்பதால் மூத்தவரின் NHIS Element delete செய்யலாம். அதற்கு வயதில் இணையவரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டமைக்கான விவரத்தினை உரிய DDO விடமிருந்து அத்தாட்சி பெற்று Delete செய்யலாம். அதனை upload செய்து Bill வுடன் இணைக்கவேண்டும். அடுத்த மாதமும் பிடித்தம் செய்யப்படாமல் இரக்கவேண்டுமெனில் வயதில் இணையவரின் அலுவலக Initiator ID யில் Spouse Employee ID யினை entry செய்யவேண்டும்
தற்சமயம் element entry யில் delete செய்யலாம்ஆனால் அது சரியான நடைமுறை அல்ல.கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பணியாளர் எனில் இரண்டு பேருடைய அலுவலகங்களிலும் employee profile இல் family members detail சென்று spouse நேராக உள்ள penci button click செய்யவும். Govt employee என்பதை தேர்வு செய்யவும் . Family member name இல் search click செய்து search by என்பதில் Employee Number ஐ select செய்து spouse employee ID கொடுத்து GO click செய்யவும் பின்னர் பணியாளர் பெயர் அதுவாகவே வந்துவிடும் விவரங்கள் அனைத்தும் நிறைவு செய்து forwardசெய்யவும். Approve login இல் Approve செய்யவும்.
கணவன் மனைவி இருவரும் உள்ள அலுவலகத்தில் இப்பணியை மேற்கொள்ள வேண்டும்
பின்னர் இரண்டு அலுவலகத்திலும் உள்ள பணியாளர்களின் பெயரை தேர்வு செய்து Mark for recalculation கொடுத்தோம் என்றால்
வயதில் இளையவருக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டதற்கான 390 ரூபாய் பிடிக்கும். பிடித்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றொருவருக்கு பிடித்தம் இல்லாமல் வந்திருக்கும்.....