மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
மனிதர்களின் வாழ்வில் பல சூழ்நிலைகள் அவர்களின் மனதை ஒருநிலைப்படுத்துவதில்லை. தேவையற்ற யோசனைகள் மனதிற்குப் பிரச்சனையாக அமையக்கூடும்..
வாழ்க்கையில் எந்த கடினமான சூழலில் இருந்தாலும் மனதை அமைதிப்படுத்தவும், தனிமையான சூழலைத் தவிர்க்கவும் இசை ஒன்று போதும். ஆம் அன்றாட வாழ்க்கையில் மன அழுத்தத்தை நிர்வகிக்கக்கூடிய கருவியாகும் இசை அமைகிறது. குத்து பாடல்கள், காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் என ஒவ்வொரு மனநிலைக்கு ஏற்றவாறும் பாடல்கள் அமைந்துள்ளது. அதிலும் மெல்லிசை பாடல்களைக் கேட்பது நமது மனதை எப்போதும் மகிழ்வுடனும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் பேருதவியாக உள்ளது.
காலை எழுந்தவுடன் உடல் சோர்வு ஒருபுறம் இருந்தாலும், மனமும் ஏதோ விரக்தியில் இருப்பது போன்று இருக்கும். இந்த மனநிலையை மாற்ற வேண்டும் என்றால், காலையில் எழுந்ததும் உங்களுக்குப் பிடித்த மெல்லிசை பாடல்களைக் கேட்க முயற்சி செய்யுங்கள்.
குறிப்பாக கிளாசிக்கல் அல்லது இன்ஸ்ட்ரூமென்டல் இசையைக் கேட்கும் போது மனம் அமைதியான சூழலை அடையும்.
பணியிடத்தில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் என்ன செய்வது என்று சோகத்தில் அப்படியே உட்கார்ந்திடுவோம். இது உங்களை மட்டுமல்ல சுற்றியுள்ள அனைவரின் மனதையும் ரணமாக்கும் எனவே ஏதாவது சோகத்தில் இருக்கும் சமயத்தில் போன் பிளேலிஸ்டில் உங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கவும்.
கோபம் அதிகமாகும் போது மன அழுத்தமும் ஒருபுறம் அதிகமாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றாலும் மெல்லிசை கேட்பது நல்லது.
எந்தளவிற்கு உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்கிறீர்களோ? அது உங்களது மனதை உற்சாகப்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நாளை அமைதிப்படுத்துவதற்கு எப்படி இசையுடன் தொடங்கினீர்களோ? அதே போன்று நாளின் முடிவிலும், ஓய்வெடுக்கும் போதும் மனதிற்கு அமைதியைத் தரக்கூடும் பாடல்களைக் கேட்கவும். தூங்கும் போது பாடல்களைக் கேட்பது மன அழுத்த மேலாண்மைக்கு பேருதவியாக இருக்கும்.
மன அழுத்தம் ஏற்படுவது மனிதர்களுக்கு இயல்பான ஒன்று. குடும்ப சூழல், பணியிடத்தில் பிரச்சனை போன்ற பல காரணங்கள் மனிதர்களை சில அதிக உணர்ச்சி அடைய செய்யும். சில நேரங்களில் எந்தவித உணர்ச்சி இல்லாமல் செய்துவிடும். மூளைக்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் அதிக அழுத்தம் பெறும் போது தலைவலியையும் அனுபவிக்க நேரிடும்.
இதோடு மட்டுமின்றி சில நேரங்களி அதிக மன அழுத்தம் சுவாச பிரச்சனைகளை உடனடியாக பாதிக்கும். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு விடுவதற்குக் கூட சிரமத்தை சந்திக்க நேரிடும் என்பதால் பிடித்த விஷயங்களை மேற்கொள்வது நல்லது.