திருக்குறள் ஒப்புவிப்பு : முதல்வர் பரிசளிப்பு
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், 'திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு' திட்டத்தின் கீழ், 1,330 குறள்களையும் ஒப்புவித்த, 50 மாணவ - மாணவியருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுசான்றிதழ்களை, முதல்வர்பழனிசாமி வழங்கினார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், இந்நிகழ்ச்சி நடந்தது. அப்போது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின், தமிழ் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும், 13 மாணவர்கள், மலேஷியாவில் உள்ள, 'சுல்தான் இட்ரீசு' கல்வியியல் பல்கலையில், தமிழ் ஆய்வு மேற்கொள்ள செல்வதை ஒட்டி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர், பாண்டியராஜன், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர், வெங்கடேசன் கலந்து கொண்டனர்.