மேலும் ஒரு பல் மருத்துவ கல்லூரி
தமிழகத்தில், விரைவில், மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லுாரி துவங்கப்படும்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை, அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1.22 கோடி ரூபாயில், 30 படுக்கை வசதிகளுடன் உள்நோயாளிகள் பிரிவு...
இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகள், தானியங்கி ரத்த பரிசோதனை ஆய்வகம் மற்றும் மாண வர்கள் விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவற்றை, நேற்று துவக்கி வைத்த, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில், 348 அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், பல் மருத்துவ பிரிவுகள் உள்ளன.
இப்பிரிவுகள், மேலும், 186 ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரிவுபடுத்தப்படும்.
தமிழகத்தில், மேலும் ஒரு பல் மருத்துவக் கல்லுாரி துவக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.