CPS வட்டி: அரசு உத்தரவு
பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தில், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 7.6 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு ஊழியர்களிடம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு, 2017 அக்டோபர், 1 முதல், டிச., 31 வரை, 7.8 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.6 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசின், நிதித்துறை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்