சாக்லேட் நிறத்தில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டு
சாக்லேட் பிரவுன் நிறத்தில், புதிய, 10 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.கடந்த, 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பின், புதிய, 2,000 - 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து, 200 - 50 ரூபாய் நோட்டுகளும் புதிய வண்ணத்தில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில், சாக்லேட் பிரவுன் நிறத்தில், புதிய, 10 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. கடைசியாக, 2005ல், புதிய வடிவமைப்பில், 10 ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. அதன்பின், தற்போது அதன் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கோனார்க் சூரியனார் கோவில் படத்துடன் கூடிய, இந்த புதிய நோட்டை அச்சடிக்க, மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.