ஏ.டி.எம்.,களில் ரூ.200; ஆர்.பி.ஐ., நடவடிக்கை
அனைத்து தரப்பு மக்களுக்கும், புதிய, 200 ரூபாய் நோட்டு சென்றடைவதற்காக, வங்கி ஏ.டி.எம்.,களில், 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில், இயந்திரங்களை மறு சீரமைப்பு செய்ய, ஆர்.பி.ஐ., உத்தரவிட்டு உள்ளது.
சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில், புதிய, 200 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டு, வங்கிகள் மூலம், மக்களிடம் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன. எனினும், இவ்வகை நோட்டுகளை, தற்போதுள்ள, ஏ.டி.எம்.,களில் வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இவ்வகை நோட்டுகள், பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, புதிய, 200 ரூபாய் நோட்டுகளை, ஏ.டி.எம்., மிஷின்கள் மூலம் வினியோகம் செய்யும் வகையில், மிஷின்களை மறு சீரமைப்பு செய்ய, அனைத்து வங்கிகளுக்கும், ஆர்.பி.ஐ., உத்தரவிட்டு உள்ளது. விரைவில், அனைத்து, ஏ.டி.எம்., களும் மறு சீரமைப்பு செய்யப்பட்ட பின், அதில், புதிய, 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என, வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.