யூடியூப் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு.. எதற்குத் தெரியுமா?
வீடியோ தளமான யூடியூப் பிரபலமான வீடியோக்களில் ஏற்படும் வன்முறை தீவிரவாதம், குழந்தைகளைத் தவறாக நடத்தும் வீடியோ பொன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணிக்கு எடுக்க உள்ளது. கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவின் சிறப்பு ஊழியராகச் சூசன் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தவறான நடிகர்கள் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
10,000 ஊழியர்கள் எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்குவிளைவிக்கும் பொன்ற பிரச்சனைகளைத் சேகரிக்க 10,000 நபர்களைப் பணிக்க எடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற தளங்கள் யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், டிவிட்ட போன்ற அனைத்துச் சமுக வலைதளங்களிலும் பயங்கரவாத பொருள் மற்றும் பிரச்சாரம் போன்றவற்றில் சிக்கிவிடுகின்றன.
தெரேஷா மே பிரிட்டிஷ் பிரதமர் தெரேஷா மே-ம் சமுக வலைத்தளங்கில் உள்ள தீவிரவாத உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. டெக் நிறுவனங்களும் இணையதளங்களில் தீவிரவாதம் போன்ற உள்ளடக்கங்கள் வராத அளவிற்கு மேலும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் தெராசே மே கூறினார்.
யூடியூப் பிளாக் சில வீடியோக்கள் பெரியவர்களுக்கானதாக இருக்கும், அதை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது, இதற்காக நாங்கள் தீவிரமாக வ்வேளை செய்து வருகிறோ என்று யூடியூப் நிர்வாகமும் தனது பிளாகில் தெரிவித்துள்ளது.
யூடியூப் கிட்ஸ் குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.