ஒக்கி புயல்: மும்பை பள்ளிகளுக்கு விடுமுறை
ஒக்கி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து மும்பையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30ம் தேதி உருவான ஒக்கி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள கடற்கரை பகுதியையும் புரட்டிப் போட்டது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டன. பின்னர் தென்கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவை கடந்து சென்றது. இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒக்கி புயல் வடக்கு-வட மேற்கு திசையில் குஜராத்தை நோக்கி நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக மாறி தெற்கு குஜராத்-வடக்கு மகாராஷ்டிரா இடையே நள்ளிரவில் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.புயல் எச்சரிக்கை காரணமாக மும்பையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைஅளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டள்ளது.