விளையாட்டு பல்கலை சிண்டிகேட் ரத்தாகுமா?
தமிழ்நாடு விளையாட்டு பல்கலை பேராசிரியர் நியமனத்தில், முறைகேடு புகார் எழுந்ததால், இன்று நடக்கவுள்ள, சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில், துணை வேந்தர் பணியிடம், ஜூலை முதல் காலியாக உள்ளது. அதனால், தமிழக அரசின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு முதன்மை செயலர், தீரஜ்குமார் தலைமையில், தற்காலிக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலையின் உதவி பேராசிரியர் பணியில், ஒன்பது காலியிடங்களை நிரப்ப, அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், பணி நியமனத்துக்காக, சிலர், லட்சக்கணக்கில் பேரம் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, முறைகேடு இல்லாமல் பணி நியமனம் செய்வதற்காக, இன்று பல்கலையில் நடக்கவுள்ள சிண்டிகேட் கூட்டத்தை, ரத்து செய்ய வேண்டும் என, பேராசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.