யுனெஸ்கோ தந்த பெருமை
யுனெஸ்கோ தந்த பெருமை
சென்னை பாரம்பரிய இசை நகரமாக அறிவிக்கப்பட்டது போல, தாய்லாந்தின் சியங் மாய் நகரம் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுப்புற கலைகளின் நகரமாக அறிவிக்கப் பட்டுள்ளது. வட தாய்லாந்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகராக சியங்மாய் உள்ளது. சியங் மாய் என்றால் தாய் மொழியில் புதிய நகரம் என்று அர்த்தம். இந்த நகரில் தாய்லாந்து பழங்குடியினரின் வாழ்க்கையை சித்தரிக்கும் அருங்காட்சியகம் உள்ளது. இங்குள்ள தோய் சுதீப் மலையில் தேராவாதம் என்னும் மிக பழமையான புத்த சமயப்பிரிவை சேர்ந்த புத்தசமய கோயில் 'வாட் பிரா தாட் தோய் சுதீப்' உள்ளது.