அக்டோபர் 6 வரை தமிழகத்தில் மழை: வானிலை மையம்
'வரும், 6ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மழை தொடரும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வானிலை மையம் கூறியுள்ளதாவது: தென்மேற்கு பருவ மழை, கர்நாடகா, ஆந்திராவில் தீவிரமாக பெய்து வருகிறது. அதேபோல, வங்க கடலில், ஆந்திரா முதல், தமிழகத்தின் வடக்கு மாவட்டங்கள் வரை, வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உள்ளது. அதனால், தமிழகம், புதுச்சேரியில் உள்ள வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை, 6ம் தேதி வரை தொடரும். இவ்வாறு அந்த மையம் கூறியுள்ளது.