GATE Exam for PG Courses of Engineering, Science and Technology Announced - I I T Guwahati
நாட்டின் சிறந்த தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களாக கருதப்படும், ஐ.ஐ.டி.,-களில், பொறியியல், கட்டடக்கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரிவுகளில், முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கான ‘கேட்’ தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை, ஐ.ஐ.டி.,- குவஹாத்தி வெளியிட்டுள்ளது.
சிறப்பம்சம்: முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பெறவும் தகுதித்தேர்வாக ‘கேட்’ எனும் ‘கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்’ விளங்குவது குறிப்பிடத்தக்கது.
தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் அல்லது அறிவியல், கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு படித்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 5