பனை மரங்களை வளர்க்கும் பணகுடி பள்ளி மாணவர்கள்
தமிழரின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது பனைமரம். அதன் அனைத்து பாகங்களும் பயன்படுவதே இதற்கு காரணம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தண்ணீர் இல்லாமலேயே வளரும் தன்மையுடைய பனைமரத்தை, காடு, தோட்டம் என வித்தியாசம் இல்லாமல் வயல் ஓரங்களிலும், வேலி ஓரங்களிலும் விவசாயிகள் வளர்த்தனர். இப்போது அவை அழியும் தருவாயில் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு பனைமரம் காட்சிப்பொருளாகிவிடுமோ என்ற நிலை உருவாகியுள்ளது.
இதனிடையே பனைமரங்களை வளர்க்கும் பணியில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் விதைத்த பனங்கொட்டைகளில் ஆயிரத்துக் கும் மேற்பட்டவை முளைவிட்டு வளர்ந்திருக் கின்றன. நடப்பாண்டு ஆயிரம் பனங்கொட்டைகளை குளக்கரைகள், ஓடைப்பகுதி, புறப்போக்கு நிலங்களில் இப்பள்ளி மாணவர்கள் விதைத் திருக்கிறார்கள்.