பாரா மெடிக்கல் தரவரிசை பட்டியல்
பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவ படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் - பி.பார்ம்., - பிசியோதெரபி என்ற, மூன்று படிப்புகளுக்கு, 7,190 இடங்கள் உள்ளன. இதற்கு, விண்ணப்பித்தோருக்கான தரவரிசை பட்டியலை, மருத்துவ க் கல்வி இயக்ககம், நேற்று வெளியிட்டுள்ளது. இதில், 18 ஆயிரத்து, 495 பேர் இடம் பெற்றுள்ளனர். 'மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.