நுண்துளை சிகிச்சை பட்ட மேற்படிப்பு
சென்னை மருத்துவக் கல்லுாரியில், நுண்துளை அறுவை சிகிச்சையில், இரண்டு ஆண்டு சிறப்பு பட்ட மேற்படிப்பு துவக்கப்பட்டு உள்ளது. இதில், நான்கு இடங்கள் உள்ளன; இந்த ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இதற்கு, 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பங்களை, வரும், 28 வரை, பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும், 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, செப்., 4ல் நடத்தப்பட்டு, அந்த வாரத்தில் முடிவுகள் வெளியாகும். மேலும் விபரங்களை, www.tnhealth.org மற்றும் www.mmc.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.