17 மாவட்டங்களில் உடற்பயிற்சி மையம்
தமிழகத்தில், 17 மாவட்டங்களில், நவீன உடற்பயிற்சி மையங்கள் அமைக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைக்கப்படும் இம்மையங்கள், போட்டிகள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்படும். சென்னை, மதுரை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, விருதுநகர், கடலுார், தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல், துாத்துக்குடி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி ஆகிய, 17 மாவட்டங்களில், நவீன உடற்பயிற்சி மையம் அமைக்க, அரசு, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.