டி.பார்ம். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
டி.பார்ம், போஸ்ட் பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
செவிலியர் பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கான போஸ்ட் பி.எஸ்சி., டி.பார்ம், ஏற்கெனவே டி.பார்ம் முடித்தவர்களுக்கான பி.பார்ம் (lateral entry) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்களை www.tn.gov.in,. www.tnhealth.org ஆகிய 2 இணையதளத்திலும் ஜூலை 11-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு ஜூலை 22-க்குள் வந்து சேர வேண்டும்.
தரவரிசைப் பட்டியல் ஜூலை 4-ஆம் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 2-ஆம் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.