மிஸ்டு கால் கொடுங்க-பணப் பரிமாற்றம் செய்யுங்க: ஃபெடரல் வங்கி புதிய சேவை அறிமுகம்
மிஸ்டு கால் மூலம் வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, ஃபெடரல் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவில் முதன் முறையாக மிஸ்டு கால் வாயிலான பணப் பரிமாற்ற சேவைகளை அறிமுகம் செய்துள்ளோம்.
இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தங்கள் செல்பேசியிலிருந்து 7812900900 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால், வேண்டிய நபர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த சேவை மூலம் ஒரு நாள் சுமார் ரூ. 5 ஆயிரம் வரையும், மாதம் ரூ 25 ஆயிரம் வரையும் அனுப்ப முடியும் என கூறப்பட்டுள்ளது.