தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
கொரனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையோரங்களில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.