மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு 12 முதல் இடமாறுதல்
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, 12ம் தேதி இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
பள்ளி கல்வித் துறையில் இந்த கல்வி ஆண்டுக்கான இடமாறுதல் நடவடிக்கைகள் துவங்கி உள்ளது. முதலில் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு இடமாறுதல் அறிவிக்கப்பட்டது. அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.
மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12-10-2021 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்து பணியிடங்களும் காலிப்பணியிடமாகக்(Zero Vacancy) கருதப்பட்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கலந்தாய்வு நடத்தப்பெறுகிறது. இதுவும் ஒருவகையில் கட்டாய பணிமாறுதலாகவே கருதப்படுவதாக அலுவலர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 3 வது வாரத்தில் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 52500/அ1/இ1/2021 நாள் 05-10-2021