• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • >District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Squard Form

ITR Filing: உடனே பண்ணுங்க கடைசி நாள் அவகாசம் வரை ஏன் காத்திருக்கக் கூடாது தெரியுமா?

  • Sep, 30, 2021

Income Tax Return: Why you shouldn’t wait for the extended due date to file ITR: தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்; உடனே வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள்

கொரோனா காரணமாக கடந்த மதிப்பீட்டு ஆண்டை (AY 2020-21) போலவே, இந்த மதிப்பீட்டு ஆண்டிலும் (AY 2021-22) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் 30, 2021 வரையிலும், தற்போது டிசம்பர் 31, 2021 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி இணையதளத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்போது நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், வரி செலுத்துவோருக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி இணையதளத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, ரிட்டர்ன்களை தாக்கல் செய்வது மற்றும் சரிபார்ப்பது தொடர்பாக, 2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. என்று ஹோஸ்ட்புக்ஸ் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் கபில் ராணா கூறினார்.

இருப்பினும், வரி செலுத்துவோர் ஐடிஆர் தாக்கல் செய்வதில் கால அவகாசம் பெற்றிருந்தாலும், பிரிவு 234 A மற்றும் 234 B ஆகியவற்றின் கீழ் வட்டியைத் தவிர்ப்பதற்காக வரி செலுத்துவோர் சீக்கிரம் வருமானத்தை தாக்கல் செய்ய வேண்டும், ஏனெனில் வருமான வரிச் சட்டம் 1961 ன் பிரிவுகள் 234 A மற்றும் 234 B –ன் படி தாமதமாக ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதற்கான அபராதத்தில் எந்த சலுகையும் இல்லை. ஐடிஆர் தாக்கல் செய்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் தாமதமாக வரி செலுத்துவதற்கு வருமான வரி செலுத்துவோர் பிரிவு 234 A ன் கீழ் வட்டி செலுத்த வேண்டும். வரி செலுத்துவோர் முன்கூட்டியே வரி செலுத்தவில்லை அல்லது வரி பொறுப்பில் 90 சதவிகிதத்திற்கும் குறைவாக செலுத்தியிருந்தால், அவர் பிரிவு 234B இன் கீழ் மாதத்திற்கு 1 சதவிகிதம் அல்லது மாதத்திற்கு ஒரு பகுதியாக ஏப்ரல் முதல் வரி செலுத்தும் தேதி வரை வட்டி செலுத்த வேண்டும்” என்று ராணா கூறினார்.

செலுத்த வேண்டிய வரி மீதான வட்டி குறித்து பேசிய ராணா, “பிரிவு 208 ன் கீழ், ஒரு நபர் ஆண்டுக்கு 10,000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட வரிப் பொறுப்பு இருந்தால் முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும். எனவே, நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய தாமதமானாலும், முன்கூட்டியே வரி செலுத்துவது நல்லது. முன்கூட்டியே வரி செலுத்துவதைப் பொறுத்தவரையில், இந்தியாவில் வசிக்கும் ஒரு நபர் 60 வயது அல்லது அதற்கு மேல் மற்றும் வணிகம் மற்றும் தொழிலில் இருந்து வரும் வருமானம் தவிர வேறு வருமானம் இருந்தால் முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை, எனவே அத்தகைய நபர்களுக்கு பிரிவு 234B இன் கீழ் வட்டி பாதிப்பு இருக்காது. “

“முன்கூட்டியே வரி, 89/90, 90A & 91 மற்றும் TDS/TCS கழித்தபின் மொத்த வருமானத்தின் மீதான வரியின் அளவு, குறைந்தபட்ச வரி வரவு 1 லட்சத்தை தாண்டியது என்றால் பிரிவு 234A இன் கீழ் வட்டி பொருந்தும். இங்கு கவனிக்க வேண்டியது வரி செலுத்துவதைப் பொறுத்தவரை, வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எதுவும் இல்லை மற்றும் இணையதளம் தடையின்றி வேலை செய்கிறது, ”என்று ராணா கூறினார்.

செலுத்த வேண்டிய வரியின் வட்டி தவிர, காலக்கெடுவை இழப்பது தாமதக் கட்டணத்தையும், வருமான வரிச் சட்டத்தின் 234F யையும் ஈர்க்கிறது.

“தாமதமான கட்டணமாக ரூ. 5,000 செலுத்தப்பட வேண்டும். மொத்த வருமானம் ரூ .5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், கட்டணம் ரூ .1,000 ஆக இருக்கும்,” என்றார் ராணா.

எவ்வாறாயினும், ஒரு மதிப்பீட்டு ஆண்டின் டிசம்பர் 31 வரை ஒரு குறிப்பிட்ட தேதியைத் தவறவிட்டால் ரூ .5,000 தாமதக் கட்டணம் பொருந்தும், மற்ற சந்தர்ப்பங்களில் கட்டணம் ரூ .10,000 ஆகிறது.

எனவே, டிசம்பர் 31, 2021 நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை தவறவிட்டால், வரி செலுத்துவோர் இரட்டை அபராதம் அல்லது ரூ .10,000 செலுத்த வேண்டும்.

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2025. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific