சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடுக்க கடுமையான சட்டம் தேவை
கிருஷ்ணகிரி, பர்கூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற, மூன்று பள்ளி மாணவர்கள், லாரியை முந்தி சென்றபோது, விபத்தில் சிக்கி பலியானது அதிர்ச்சி அளித்தாலும், வியப்பளிக்கவில்லை. பெற்றோரின் அலட்சியமே, இந்த மூன்று மாணவர்களின் உயிரிழப்புக்கு மிக முக்கியக் காரணம். சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடுக்க மறுத்த குற்றவாளிகள் அந்த பெற்றோர். பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் இன்றும் உரிமமின்றி வாகனங்களை ஓட்டுகின்றனர். கடுமையான சட்டங்களை அமல்படுத்தி, தண்டிக்க வேண்டியது அரசின் கடமை என தமிழக பாஜக துணைத்தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்