இந்த ஆண்டும் அ மற்றும் ஆ பிரிவு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே!
தமிழக அரசு ஆணை எண் 2 நாள் 6.01.2020 இன் படி பொங்கல் போனஸ் இ மற்றும் ஈ பிரிவு ஊழியர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அ மற்றும் ஆ பிரிவு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படவில்லை. அதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆண்டாவது கருணைத் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. இதனால் இனி வரும் காலங்களிலும் அ மற்றும் ஆ பிரிவு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கருணைத் தொகை வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுவது அரிது என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். அரசாணையை பதிவிறக்க click here