கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்குள்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமி்ழகத்தில் வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் நாளை முதல் இரு நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்தது.
இந்நிலையில் 30-ஆம் தேதியான இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டி வருகிறது. இன்றே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியும், சென்னை ஆட்சியர் அன்புச்செல்வனும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளனர்.