தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
'காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், நேற்று மாலையில், அண்ணா சாலை, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், இடியுடன் கூடிய மழை பெய்தது. இது போன்று தமிழகத்தின் பல இடங்களிலும், மழை பெய்தது. இன்றும் மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக்கடலில், வட தமிழகம், கேரளா வரை, காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில், இடியுடன் கூடிய கன மழை பெய்யும். உள் மாவட்டங்களில், பல இடங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.