இலவச, லேப் - டாப் திட்டம் தமிழகத்தில் மீண்டும் துவக்கம்
தமிழகத்தில், நிறுத்தப்பட்டிருந்த இலவச, 'லேப் - டாப்' வழங்கும் திட்டம், மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.
இலவச,'லேப் - டாப்' ,திட்டம் ,தமிழகத்தில், மீண்டும், துவக்கம்
தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியருக்கு, இலவசமாக 'லேப் -- டாப்' வழங்கப்படுகிறது. 2016 வரை, 40 லட்சம், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டன. கடந்த, 2016ல், இந்த வினியோகம்,திடீரென நிறுத்தப்பட்ட தால், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டுஉள்ளது.
டெண்டரில் பங்கேற்ற நிறுவனம் ஒன்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் ததால், 2016ல், மாணவ மாணவியருக்கு, 'லேப் - டாப்' வழங்க முடியாமல் போனது. தற்போது, அந்த வழக்கு முடிந்துவிட்டது. அதனால், 'லேப் - டாப்' வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்குவதற்கான, 'லேப் - டாப்' விரைவில் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிய வருகிறது.