திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் அரசு மேனிலைப் பள்ளி மாணவி கே. லோகேஸ்வரி தனி நபர் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் அரசு மேனிலைப் பள்ளி மாணவி கே. லோகேஸ்வரி தனி நபர் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை
திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் மாமண்டூர் அரசு மேனிலைப் பள்ளி மாணவி கே . லோகேஸ்வரி 100 மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 200மீ ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடமும் மற்றும் உயரம் தாண்டுதலில் முதலிடமும் பெற்று தனி நபர் பிரிவில் அதிக புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் . அவரை அப்பள்ளியின் தலைமைஆசிரியர் திரு. இ. ராஜேந்திரன் , தொழிற்கல்வி ஆசிரியர் திரு வி. வேணுகோபால் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு . யுவராஜன் ஆகியோர் பாராட்டினர். , மாணவி கே. லோகேஸ்வரி என்பாரிடம் பேட்டி கண்டதில் தான் முதலிடம் பெற்றமைக்கு தம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் பெரிதும் ஊக்கமளித்ததாகவும் உடற்கல்வி ஆசிரியர் திரு. யுவராஜன் அவர்களின் பயிற்சியினாலும் தான் தம்மால் சாதிக்கமுடிந்ததாக தெரிவித்துள்ளார்.