அரையாண்டுத் தேர்வு ஜனவரிக்கு ஒத்திவைப்பு : முதல்வர் அறிவிப்பு
கனமழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வை ஜனவரி 2016க்கு ஒத்திவைத்து முதல்வர் ஜெ. ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.
முன்னதாக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி மாநில முழுவதும் ஒரே நேரத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
மாநிலத்தில் பல இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அடிக்கடி விடுமுறை விடப்படுவதால் டிசம்பர் 7ம் தேதி துவங்க இருந்த அரையாண்டுத் தேர்வை ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.