முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் மறைவு : கண்ணீர் அஞ்சலி
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் இந்தியாவின் ஒப்பற்ற அணு விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84 மேகாலயாவில் ஐ.ஐ.எம்.மில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று பேசிக்கொண்டிருந்த போது கலாம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியைடைந்தனர். பின்னர் உடனடியாக அவர் ஷில்லாங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக கலாம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அன்னார் அணு விஞ்ஞானியாகவும் குடியரசுத்தலைவராகவும் நம் நாட்டிற்கு செய்த சேவை இத்தருணத்தில் நினைவு கூரத் தக்கது. அன்னாருடைய இழப்பு இந்திய துணைக்கண்டத்திற்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.