வேலையில்லா இளைஞர்கள், விவசாயிகளுக்கு புது சலுகை:சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் மானியம்
வேலையில்லா இளைஞர்கள், விவசாயிகளுக்கு புது சலுகை:
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ரூ.50 லட்சம் மானியம்
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, ஒரு மெகாவாட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்க, மத்திய அரசு, முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழகத்திற்கு, 446 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில், புதிய சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒரு மெகாவாட் திறன் கொண்ட, சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசின் சார்பில், 50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ், 893 மெகாவாட் திறன் கொண்ட, சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, 446 கோடி ரூபாய் மானிய தொகையை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.மத்திய புதுப்பிக்கத்தக்க துறை செயலர் உபேந்திர திரிபாதி, புதிய சூரிய சக்தி மின் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளின் தலைமை செயலர்களுக்கு, கடிதம் எழுதி உள்ளார்.
*துணை மின் நிலையங்களுக்கு அருகில், சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க வேண்டும். இடத்தின் விவரத்தை, மாநில மின் வாரியங்கள் தெரிவிக்க வேண்டும்
*ஒருவர் குறைந்த பட்சம், 0.50 மெகாவாட் முதல், ஐந்து மெகாவாட் வரை, மின் நிலையம் அமைக்கலாம்
*மத்திய அரசின் மானியத்துடன், மாநில அரசுகளும் கூடுதல் மானியம் வழங்கலாம்
*இத்திட்டம் குறித்து, மாநில அரசுகள், ஜூலை, 22ம் தேதிக்குள், தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிடில், ஒப்புதல் தெரிவித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்
*ஏழு ஆண்டுகளுக்குள், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
*விண்ணப்பதாரர் தேர்வில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதுடன், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
*தேர்வு முறை உள்ளிட்டவை வெளிப்படையாக இருக்க வேண்டும்
*மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்த விலையில், மின்சாரம் வாங்க வேண்டும்
*திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் தலைமை செயலர் தலைமையில், மின்சாரம், வேளாண், தொழில், வங்கி, தொழில்நுட்ப பயிலகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.