என்னால் அடிக்கப்பட்டது என மாணவரே எழுதுவது அவசியம்: பள்ளிக்கல்வி இணை இயக்குனர்
அரசு தேர்வுத்துறை சார்பில், பிளஸ் 2 தேர்வு ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பேசியதாவது:
“பிளஸ் 2 தேர்வில், விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின், "மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது" என மாணவரே எழுதுவது அவசியம் எனவும், மேலும் பயன்படுத்தா பக்கங்களில் குறுக்கு கோடிட்டு "பயன்படுத்தாத பக்கம் என்னால் அடிக்கப்பட்டது" எனவும் மாணவர்கள் தங்கள் கையாலேயே எழுதவேண்டும் எனவும்,
வினாத்தாள் கட்டுகளை மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க வேண்டும். அப்போது 2 மாணவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பக்கங்களை கொண்ட விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளது எனவும்,
இதனால் மாணவர்களுக்கு விடைத்தாள் வழங்கியதும் உடனடியாக பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்க்க வேண்டும்.
விடைத்தாளில் வேறு எந்த குறியீடும் எழுதக்கூடாது என மாணவர்களிடம் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். தேர்வு முடிந்ததும் விடைத்தாளை முழுமையாக சரிபார்த்த பின்பே, மாணவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும், எனவும் கூறினார்.