GPF Account Slip (தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பொது வருங்கால வைப்பு நிதி) இனி இணையதளத்தில் மட்டுமே
தமிழக அரசு ஊழியர்களுக்கான 2013-14- ஆம் நிதியாண்டின் ஜிபிஎப் கணக்குஅறிக்கை, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு (DDO) ஜூலை இரண்டாம்வாரத்திலிருந்து அனுப்பப்பட உள்ளது. ஜிபிஎப்சந்தாதாரர்கள், கடந்த பிப்ரவரி28-ஆம் தேதி எந்த அலுவலகத்தில்பணியாற்றினார்களோ, அந்த அலுவலகடி.டி.ஓ.விடம் தங்களின்ஆண்டு கணக்கு அறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், 2013 -14 -ஆம்ஆண்டு முதல், ஜிபிஎப்சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டுகணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் அலுவலகஇணையதளத்தில்www.agae.tn.nic.in பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதிசெய்யப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆண்டு அறிக்கைநகல்கள் இனி மாநில கணக்காயர்அலுவலகத்தில் வழங்கப்படமாட்டாது. மேலும் நடப்புநிதியாண்டு முதல், ஜிபிஎப்ஆண்டு கணக்கு அறிக்கையைசந்தாதாரர்கள் இணையதளத்தின் மூலம் மட்டுமேபதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களது GPF Account Slip பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்