ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவரை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னழகன் - பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆவார்.
இவர், இந்த ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி. - ஐதராபாத்) என்ஜினீயரிங் படிப்பதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார்.
மாணவர் அருண்குமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
எளிய பின்புலத்தில் இருந்து வந்து அரசு பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவர் அருண்குமாரை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மேற்படிப்புக்கான கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று உறுதி அளித்தார்.