47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி இன்று (03-01-2024)துவக்கம்
47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (03-01-2024) தொடங்கி வைக்கிறார். நந்தனம் YMCA உடற் கல்வியியல் கல்லூரியில் இன்று மாலை 5 மணிக்கு புத்தகக் காட்சி தொடங்குகிறது. மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை முதல்வர் வழங்குகிறார்.