மன்னிப்பை! பற்றி மருத்துவம் சொல்வது!! பகீர் தகவலாக உள்ளது!!!
- நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.
- உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.
- அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.
- அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன, மருத்துவ ஆராய்ச்சிகள்.
- 'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.
- 'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது.
- எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.
- ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.
- மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.
- மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
- மன அழுத்தத்தை குறைக்கும்.
- இதுவே காரணமாம்.
- இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.
- 'ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.
- இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.
- 'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.
- ஆனால் மதங்களைப் பின்பற்றும், நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?
- நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை, மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ள முடியும்..
- மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.
- மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது, நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும், நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.
- மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால், பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள், மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.
- குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது, எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.
- அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு, நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.
- குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம், கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.
- பல வேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.
- கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.
- எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.
- அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.
- மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.
- ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.
- வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல.
- அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.
- உண்மையான அன்பு இருக்கும் இடத்தில், மன்னிக்கும் மனம் தானே முளைவிடும். மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.
- மன்னிப்புக் கேட்காதவர்களையும், மன்னிக்க மறக்காதீர்கள்.
- மறப்போம் மன்னிப்போம் ஆரோக்கியம்க அமைதியாக வாழ்வோம்