ஐ.டி. வேலைவாய்ப்பு குறையும் அபாயம் வருமா?
ஆர்ட்டிபீஸியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய தொழில்நுட்பங்களினால் ஐ.டி. துறையில் 70 சதவிகிதமான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்கிற பகீர் அறிக்கையை கார்ட்னர் (Gartner) நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
நமது பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆதரவாக இருப்பது ஐ.டி வேலைவாய்ப்புகள். கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் நம்மவர்கள் உலக அளவில் கில்லாடிகள் என்பதால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களது முக்கியமான பல வேலைகளை இந்தியாவுக்கு அனுப்பி குறைந்து செலவில் செய்து முடிக்கின்றன.
இதனால் நமக்கும் மிகப் பெரிய நன்மை. இந்தியா முழுக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் 60 லட்சம் பேருக்கும் அதிகமாக ஐ.டி. தொழில்களினால் வேலை கிடைத்துள்ளது. இதுபோக வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல லட்சம் பேரைத் தாண்டும்.
இந்த நிலையில், இனி ஐ.டி துறையில் ஆட்டோமேஷனும், ஆர்ட்டிபீஸியல் இன்டெலிஜென்ஸும் வந்தால், ஐ.டி. துறைக்கு பாதிப்பு ஏற்படுமா அல்லது நன்மை செய்யுமா என்பது பற்றி நாணயம் விகடன் வருகிற 16, 17-ம் தேதிகளில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடத்தும் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் கான்க்ளேவ்-ல் பேசுகிறார் பேராசிரியர் வீ.காமகோடி. இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் டிபார்ட்மென்ட் ஆஃப் கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் என்ஜினியரிங்கில் பணியாற்றி வருகிறார்.
இவர் பேராசிர்யர் மட்டுமல்ல, ஆர்ட்டிபீஸியல் இன்டெலிஜென்ஸை பொருளாதார மேம்பாட்டுக்காகப் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்க இந்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள செயற்குழுவின் தலைவரும்கூட.
இவரது பேச்சு, ஐ.டி துறையில் ஆர்ட்டிபீஸியல் இன்டெலிஜென்ஸும், ஆட்டோமேஷனும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நமக்குத் துல்லியமாக எடுத்துச் சொல்லும். ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்கள், என்ஜினியரிங் மாணவர்கள், கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்களை செய்கிறவர்கள் என எல்லோருமே பேராசிரியர். வீ.காமகோடியின் பேச்சைக் கேட்பது அவசியம்.
இவரது பேச்சினைக் கேட்க வேண்டுமெனில், நாணயம் விகடன் வருகிற 16, 17-ம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்தும் ஃபைனான்ஸ் & பிசினஸ் கான்க்ளேவ்-ல் பங்கு பெற உடனே பதிவு செய்துகொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்கினை http://bit.ly/nvconclave
க்ளிக் செய்யுங்கள்.
இந்த கான்க்ளேவ்-ல் கலந்துகொள்வதற்குப் பதிவு செய்ய இன்னும் சில நாள்களே இருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை உண்டு.