• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Income Tax Calculator 2025-26

நோய் தீர்க்கும் ராசி மரங்கள் : அத்திமரம்

  • 2016-07-06

 

மரங்களில் திருக்குர் ஆன், பைபிள், வேதங்கள் ஆகிய மூன்றிலும் இடம் பெற்ற ஒரே மரம் அத்தியாகும். இந்த மரம் வெள்ளி கிரகத்துடன் தொடர்பு கொண்டது. வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் காணப்படுகிறது.

இந்த கிரகத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுகள் அதிக அளவில் வெளியேறுகிறது. அதனால்தான், வெள்ளி கிரகத்திலிருந்து வெள்ளிக்கிழமை பிறந்தது. இந்த நாள் அன்று முஸ்லீம்கள் விசேஷ தொழுகை நடத்துவார்கள். கிறிஸ்தவர்களுக்கு குட் ஃபிரைடே என்கிற புனித வெள்ளிக்கிழமை விரதம் இருந்து விசேஷ பூஜைகளும் செய்வார்கள்.

இந்தக் கிரகம் மனித உடலில் கழுத்து பாகத்தை மிகவும் பாதிக்கச் செய்கிறது. மலச்சிக்கல், வீக்கம், சிறுநீரகக் கோளாறுகள், குடல்புழுக்கள், வெள்ளி கிரகத்தின் கெட்ட கதிர்வீச்சுகளால்தான் உருவாகின்றன.

  மனிதனுக்குப் பல வகையான நோய்கள் ஏற்படும் போது கிராம மக்கள் அவற்றில் சிலவற்றை வெள்ளி தோஷம் என்பார்கள். அதாவது வெள்ளி கிரகத்தின் தீய கதிர்வீச்சுளால் ஏற்பட்ட நோய்கள் என்று பொருள் கூறுவர்.

அதற்காக இந்து சமுதாய மக்கள் நவக்கிரகக் கோயிலுக்குச் சென்று வெள்ளி கிரக விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகிலுள்ள அத்தி மரத்தையும் தொட்டு வணங்கிவிட்டு வெள்ளி கிரகத் தோஷத்தைக் கழிப்பார்கள். வெள்ளி கிரகத்தைச் சுக்கிர பகவான் என்றும் அழைக்கின்றனர்.

யுனானி மருத்துவர்கள் வெள்ளி கிரக தோஷத்தை நீக்குவதற்காக அத்தி மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். அத்தி மரத்தின் அடியில் அமரச் செய்வார்கள்.

அரை மணிநேரம் அத்தி மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கச் செய்வார்கள். இதனால் வெள்ளி கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகள் நமது உடலில் சென்று நல்ல உடல் நலனைத் தரும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்று ரெய்கி மருத்துவம் கூறுகிறது.

அத்தி மரம் வெள்ளி கிரகத்தின் நல்ல மின் கதிர்வீச்சுகளைத் தன் உடலில் உறிஞ்சி நிரப்பிக் கொள்கின்றது. அதுதான் அதனுடைய மருத்துவ குணமாக மாறுகிறது என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

மருத்துவ குணம் :

அத்தி மரத்தின், இலை, பழம், பால் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.

இலை :

அத்தி மரத்தின் இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் கட்டுப்படுகின்றன.

பட்டை :

அத்தி மரப்பட்டையை இரவில் உலர வைத்துக் காலையில் குடிநீராகச் செய்து குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவும் நீராகவும் பயன்படுத்தலாம்.

பழம்:

நபிபெருமானார் (ஸல்)அவர்கள் அத்திப்பழம், அத்திப் பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிட்டால் மூலம், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு குணம் பெறும் என்று கூறியிருக்கின்றார்கள். மேலும் அத்திப் பழம் சாப்பிடுவதால் சீத பேதி, வெள்ளைப்பாடு, சர்க்கரை நோய், தொண்டைப்புண், வாய்ப்புண், வாத நோய்கள், மூட்டு வலி போன்ற நோய்களும் குணம் பெறுகின்றன.

பழங்களை இடித்து அதன் சாற்றைக் குடித்து வந்தால் சிறுநீரக நோய்கள் கட்டுப்படும். நல்ல மணத்துடன் இருந்தாலும் அத்திப் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் புழுக்கள் இருக்கும். பொதுவாக, பதப்படுத்தாமல் இதை உண்ண முடியாது.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடைந்து பருமன் ஆகும். இரவில் 5 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும். அத்திப் பழம் பதப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் "சீமை அத்திப் பழம்' என்ற பெயரில் கிடைக்கிறது. இதனைக் கொண்டு யுனானி மருத்துவர்கள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்கிறார்கள்.

பொதுவாக அத்தி மரம் ரிஷபம், துலாம் ராசி கொண்டவர்களுக்கும், கிருத்திகை, ரோகிணி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரம் கொண்டவர்களுக்கும், வெள்ளிக்கிழமை மற்றும் 21 ஏப்ரல் முதல் 20 மே மாதம் வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கும் உகந்த மரமாகும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் விளக்குகிறது.

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2026. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific