• +91 - 9952351588
  • kalviguru2013@gmail.com
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Quotes
  • Home
  • Student Zone
  • Teacher Zone
  • Forms
  • Govt. Orders
  • District News
  • Articles
  • Technology
  • Motivational
    • Motivational Videos
    • Biography
  • Online Test
  • Mutual Transfer
  • Study Material
  • Quotes
Flash News:
Income Tax Calculator 2025-26

அலைபேசி

  • 2015-07-10

நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு சுவற்றிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).

குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை[தொகு]

குறிமுறைப் பிரிப்பு பன்னணுகல் முறை இயங்கும் விதி
வானொலியை சுருதிகூட்டும் போது சில சமயம் ஒரே அலையெண்ணில் இரண்டு நிலையங்களில் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதற்கு காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் குறிகைகள் ஒரே அலையெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகிறன. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இந்த குறுக்கிடுதல் வேண்டுமென்றே ஏற்படுத்தப் படுகிறது. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு ஒரு பரவல் குறியீடு மூலம் அலையெண் கற்றையகலம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் (அல்லது இரு நகர்பேசிகளுக்கிடையான தொடர்புக்கும்) ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலையெண்ணில் பல அழைப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். குறியீடு பிரிப்பு பன்னணுகல் வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகளில் மட்டும்தான் ஒரே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதேனும் வேறு வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எந்த ஒரு தொடர்பையும் அலையெண் கற்றையகலத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற தொடர்புகள் தடங்கல் செய்யாது. இதனால் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இது பரவல் நிறமாலை தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை[தொகு]
உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், காலப்பிரிப்பு பன்னணுகல் முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தை பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது.

கம்பியில்லா முறையின் அங்கங்கள்[தொகு]
கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றை கீழே காண்போம்.

நகர் நிலையம்[தொகு]
முதலில் இருப்பது நகர் நிலையம். இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது வானலைச் செலுத்துப்பெறுவி, காட்சித் திரை, இலக்கக்குறிகைச் செயலிகள், சூட்டிகையட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, சந்தாதாரர் அடையாளக்கூறு எனவும் அழைக்கப்படுகிறது.

ஒரு நகர்பேசி சாதனத்தின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்சாதன அடையாளம் எனப் பெயர். சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - பதிந்துள்ளது. பன்னாட்டு நகர்சாதன அடையாளம் மற்றும் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் ஒன்றுக்கொன்று தினியானவை, அவைகளில் சேர்மானமும் தினித்தன்மையானது.

தள நிலையம்[தொகு]
கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தள நிலையம். ஒரு தள நிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் மற்றும் தள நிலைய இயக்ககம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தள செலுத்துப்பெறு நிலையத் துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகரும் நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வகிக்கிறது. மாநகரப் பகுதிகளில் தள செலுத்துப்பெறு நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம், அலைவெண் துள்ளல், கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது.

நகர் நிலைமாற்றகம்[தொகு]
பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல், இருப்பிடம் புதுப்பித்தல், கைமாற்றம், அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது.

இல் இருப்பிடம் பதிவகம் மற்றும் விஜய இருப்பிடம் பதிவகம் இரண்டும் நகர் நிலைமாற்றகத்துடன் ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை அழைப்பின் திசைவு மற்றும் அலையல் திறமைகளை பூர்த்திசெய்கின்றன.

ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் இல் இருப்பிடம் பதிவகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த நகர்நிலைய அலையல் எண் மூலம்தான் ஒரு அழைப்பு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையத்தில் தருக்கம்படி ஒரு இல் இருப்பிடம் பதிவகம் இருக்கும், ஆனால் அதை ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட செயல்படுத்தப்படலாம்.

விஜய இருப்பிடம் பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் இல் இருப்பிடம் பதிவகத்திலிருந்து எடுத்து சேகரிக்கும்.

நகர் நிலைமாற்றகத்திலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. நகர் நிலைமாற்றகமும் விஜய இருப்பிடம் பதிவகமும் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே.

நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் சந்தாதர்களின் சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறுதிபடுத்தும்.

கைமாற்றம் என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு.

ஒரு தள நிலைய இயக்ககத்துக்குள்ளேயே
தடம் கைமாற்றம் (Channel Handover), மற்றும்
கலம் கைமாற்றம் (Cell Handover)
இரு தள நிலைய இயக்ககங்களுக்கிடையே ஆனால் ஒரே நகர் நிலை மாற்றகத்திற்குள்ளே
இரு நகர் நிலை மாற்றகங்களுக்கிடையே
முதல் இரு கைமாற்றங்கள் அக கைமாற்றம் எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டும் புற கைமாற்றம் என்றழைக்கப்படுகின்றன.

கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் பயனில்லா காலகட்டங்கள், மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும்.

கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்க்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும்.

கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது.

கம்பியில்லா அணுகு நெறிமுறை[தொகு]
கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை:

கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில்,
இணைய வழங்கன், மற்றும்
கம்பியில்லா அணுகு நெறிமுறை தெரிந்த நகர்கருவி.
கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது.

இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்பேசித் தொழில் நுட்பம்[தொகு]
இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்...

இந்தியாவில் சி.டி.எம்.ஏ சேவையை வழங்கும் நிறுவனங்கள்
டாடா இண்டிகாம்
ரிலையன்ஸ் CDMA
MTS
Virgin CDMA
ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள்

ஏர்டெல் சின்னம்

ஐடியா சின்னம்
ஏர்செல்
ஏர்டெல்
வோடபோன்
ஐடியா
ஸ்பைஸ் டெலிகாம்
யூனிநார்
வீடியோகான் மொபைல்
ரிலையன்ஸ் ஜி.யெஸ்.எம்
ஐடியா செல்லுலார்
Virgin GSM
Loop
பிஎஸ்என்எல்
இலங்கையில் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் சண்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன.

இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள்

இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கைத் தொலைத் தொடர்பு
சண்டெல் சண்ரெல்
லங்காபெல் லங்காபெல்
டயலொக் புறோட்பாண்ட்
இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள்

 

மோபிட்டல் (Mobitel )
டயலொக் புறோட்பாண்ட்
செல்டெல்
ஹட்ச் (Hutch)
தொழில் நுட்பக் குறிப்புகள்[தொகு]
உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில்
AAAAAA-BB-CCCCCC-D
இதில் AAAAAA - மாதிரியின் அனுமதிக் குறியீடு
இதில் BB - இறுதியாகக் கூட்டிணைக்கும் குறியீடு
இதில் CCCCCC - நகர்பேசியின் தொடரிலக்கம்
இதில் D - மிகையான இலக்கம்
இந்த இலக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும் இது நகர்பேசியானது தொலைந்தால் நகர்பேசியை செயலிழக்கச் செய்ய உதவுவதோடு களவெடுத்தவரைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கவும் உதவும்.

நோக்கியா நகர்பேசி[தொகு]
நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும்.
நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம்.
நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
அருஞ்சொற்பொருள்[தொகு]
நகர்பேசி - Cellular Phone
நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
தொலைபேசி இணைப்பகம் - Telephone Exchange
குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை - Code Division Multiple Access
வானொலிக் குறிகைகள் - Radio Signals
இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு - Digital Voice Data
பரவல் குறியீடு - Spreading Code
அலையெண் கற்றையகலம் - Frequency Bandwidth
பரவல் நிறமாலை தொழில்நுட்பம் - Spread spectrum technology
உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு - Global System for Mobile communication அல்லது GSM
காலப்பிரிப்பு பன்னணுகல் - Time Division Multiple Access
வானலைச் செலுத்துப்பெறுவி - Radio Transceiver
காட்சித் திரை - Display
இலக்கக் குறிகைச் செயலி - Digital Signal Processor அல்லது DSP
சூட்டிகையட்டை - Smart Card
சந்தாதாரர் அடையாளக்கூறு - Subscriber Identification Module அல்லது SIM
பன்னாட்டு நகர்சாதன அடையாளம் - International Mobile Equipment Identification - IMEI
பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity - IMSI
தள நிலையம் - Base Station
தள செலுத்துப்பெறு நிலையம் - Base Transceiver Station - BTS
தள நிலைய இயக்ககம் - Base Station Controller - BSC
வானலைவரிவை துவக்கம் - Radio Channel Setup
அலையெண் துள்ளல் - Frequency Hopping
கைமாற்றங்கள் - Handovers
நகர் நிலைமாற்றகம் - Mobile Switching Center - MSC
பிணையத் துணையமைப்பு - Network Subsystem
பொது தொலைபேசி பிணையம் - Public Switched Telephone Network - PSTN
ஒருங்கிணைநத இலக்கச் சேவைப் பிணையம் - Integrated Services Digital Network - ISDN
பதிவுசெய்தல் - Registration
உறுதிபடுத்துதல் - Authentication
இருப்பிடம் புதுப்பித்தல் - Location Update
அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு - Roaming Subscriber Call Routing
குறிகைமுறை - Signalling
இல் இருப்பிடம் பதிவகம் - Home Location Register - HLR
விஜய(வருகையாளர்) இருப்பிடம் பதிவகம் - Visitor Location Registor - VLR
நகர்நிலைய அலையல் எண் - Mobile Station Raoming Number - MSRN
பரவல் தரவுத்தளம் - Distributed Database
பயனில்லா காலகட்டங்கள் - Idle Time Slots
நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடம் - Broadcast Control Channel
தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் - Temporary Mobile Subscriber Identity - TMSI
கம்பியில்லா அணுகு நெறிமுறை - Wireless Access Protocol
வெளி இணைப்புகள்[தொகு]
Cell Phone Deal
நகர்பேசி குறித்த விளக்கப்பக்கம்
கம்பியில்லாத் தொலைத்தொடர்பு குறித்த விளக்கப்பக்கம்
உங்கள் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தின் அளவு என்ன?

Articles

வகுப்பறையில் மாணவர்கள் இயல்பாக பேசட்டும், பேச்சில்தான் சுகம்!
Jan, 10, 2025
இந்தியாவில் அதிகம் புரிந்து கொள்ளப்படாத மாமேதை - மன்மோகன் சிங்!
Jan, 02, 2025
மன அழுத்தத்தை குறைக்கும் மெல்லிசை பாடல்கள்!
Dec, 16, 2024
நிகழ் காலம் சரியாக இருந்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும்
Nov, 28, 2024
பென்சிலுக்கு பின்னாடி கருப்பு கலர் ஏன்னு தெரியுமா?
Mar, 21, 2024

Important Websites

TN GOVT DA TABLE மருந்தில்லா மருத்துவம் காமராசரின் அரிய புகைப்படங்கள் TEACHERS RECRUITMENT BOARD TNPSC EMPLOYMENT EXCHANGE CPS WEBSITE CPS Account Slip EMIS GPF Account Slip Website Three Types of Certificates Laptop Online Entry Digital locker BANK IFSC & MICR CODE PAY EB BILL ONLINE SCHOLARSHIP Central Education Loan Site OnLine APPLY NEW RATION CARD DATA CENTRE INCOMETAX e-FILING Online Complained to Police Station DGE Site BIN VIEW NEW TEXT BOOK TNSCHOOLS TNSCERT IFHRMS EPAY ROLL INSPIRE AWARD CHITTA PATTA VIEW TNTP DGE NEW KalviGuru's Blog Gurukulam DoTE Prof.Tax Online PPO Intimation

Quick Links

Student Zone Teacher Zone Govt. Orders Forms District News Articles Technology Quotes Motivational Videos Biography Online Test Mutual Transfer Study Material About Us Contact Us
WhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்
  • Privacy Policy
  • Disclaimer
  • Terms and Condition
Copyright © 2026. All rights reserved by Kalviguru.com. Designed by: Tycoon Pacific