பழைய கைபேசியை விற்கும் முன் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
உங்களிடம் இருக்கும் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை (Old Android Smartphone) விற்று விடலாம் அல்லது எக்ஸ்சேன்ஜ் செய்து விடலாம் என்கிற திட்டம் உள்ளதா? ஆம் என்றால் எடுத்தோம் கொடுத்தோம் என உங்களுடைய பழைய போனை எடுத்து கொடுத்து விட்டு பணம் வாங்கிவிடாதீர்கள்
உங்களுடைய ஸ்மார்ட்போனாகவே இருந்தாலும் கூட அதை விற்பதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதென்ன விஷயங்கள்? அதை செய்யாவிட்டால் என்ன ஆகும்? எல்லாம் செய்து முடித்த பின்னர். கடைசியாக என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை விற்கும் முன், முதல் வேலையாக அதிலுள்ள அனைத்து வகையான வங்கி மற்றும் யுபிஐ ஆப்களையும் (Bank and UPI Apps) டெலிட் (Delete) அல்லது அன்இன்ஸ்டால் (Uninstall) நீக்கவும். டெலிட் செய்யப்படாத ஆப்களில் இருக்கும் தரவுகளும், தகவல்களும் (Data and Details) ஆபத்தானதாக மாறலாம்.
பழைய போனில் உள்ள உங்களுடைய காண்டாக்ட்களை பேக்கப் எடுப்பது போலவே, அதில் உள்ள மெசேஜ்களையும், கால் ரெகார்ட்களையும் பேக்அப் எடுத்துக்கொள்ளவும் இதற்காக நீங்கள் எஸ்எம்எஸ் பேக்கப் அன்ட் ரீஸ்டோர் (SMS Backup and Restore) போன்ற தேர்ட் பார்ட்டி ஆப்களை பயன்படுத்தலாம். அதேபோல தேவை இல்லாத மெசேஜ்களை டெலிட் செய்யவும் மறக்க வேண்டாம்!
போட்டோஸ், வீடியோஸ் மற்றும் பிற மல்டிமீடியா கன்டென்ட்களையும் பேக்கப் எடுத்துக்கொள்ளவும். இதற்காக கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் டிரைவ் (Google Drive), மைக்ரோசாஃப்ட் ஒன்ட்ரைவ் (Microsoft's OneDrive), ட்ராப்பாக்ஸ் (DropBox) அல்லது வேறு ஏதேனும் பிரபலமா கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை பயன்படுத்தவும்.
ஒரு ஸ்மார்ட்போனை ஃபேக்டரி ரீசெட் செய்வதன் வழியாக அதிலுள்ள எல்லா தரவுகளையும் அழிக்க முடியும், ஆனால் அதிலுள்ள கூகுள் அக்கவுண்ட்டில் இருந்து லாக்-அவுட் செய்யாது எனவே, ரீசெட் செய்வதற்கு முன் அனைத்து கூகுள் அக்கவுண்ட்கள் மற்றும் பிற ஆன்லைன் அக்கவுண்ட்களிலிருந்து கைமுறையாக லாக்-அவுட் செய்வது அவசியம்.
உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்கும் முன், அதில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்டை அகற்றுவதை உறுதி செய்து கொள்ளவும். கூடவே சிம் கார்டையும் அகற்றவும். ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போன் இசிம் மாடலாக இருந்தால், இசிம் டேட்டாவை அகற்றி விடவும். இதை செய்ய உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ஐ அணுக வேண்டியிருக்கும்.
வாட்ஸ்அப் டேட்டாவை பேக்கப் எடுப்பதும் முக்கியம். இதன் மூலம் ஒரு புதிய ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்யும் போது, உங்களுடைய சாட் பேக்கப்பை எளிமையாக ரீஸ்டோர் செய்ய முடியும். அதே சமயம் உங்கள் பழைய ஸ்மார்ட்போனில் எந்தவிதமான வாட்ஸ்அப் தரவுகளும் (மெசேஜ்கள், இமேஜ்கள் மற்றும் வீடியோக்கள்) இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும் முடியும்.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, உங்களின் பழைய ஸ்மார்ட்போனில் உள்ள உள்ள அனைத்து முக்கியமான கோப்புகள் / தரவுகள் / ஆப்கள் என எல்லாமே பேக்கப் எடுக்கப்பட்டு விட்டது மற்றும் அன்இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டது என்பதை உறுதிசெய்த பின்னர் ஃபேக்டரி ரீசெட்டை தொடரவும். இது செட்டிங்ஸ் வழியாக அணுக கிடைக்கும்; உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து எல்லா தரவுகளையும் அழிக்கும்.