ஆதார் கார்டு, ஆன்லைனில் செய்யக்கூடாத தவறுகள்.
ஆதார் கார்டு வைத்து இருப்பவர்கள் ஆன்லைனில் செய்யக்கூடாத தவறுகள்.
இந்தியாவில் அனைத்து முக்கிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதாவது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது, வங்கி தொடர்பான சேவை, லோன் எடுப்பது, புது சிம் கார்டு வாங்குவது, KYC அப்டேட், இறப்பு சான்றிதழ் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தான் தேவைப்படுகிறது.
நம்மில் பலர் ஆன்லைன் ஆப்களில் தான் ஆதார் கார்டை பதிவு செய்து பெரும்பாலும் வைத்திருக்கிறோம். ஆனால் சில சமயங்களில் ஆன்லைன் ஆப்களில் ஆதார் சேமித்து வைக்கும்போது மோசடிகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளன. எனவே இதை தவிர்க்க நாம் செய்ய வேண்டி 5 முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
ஆன்லைனில் செய்யக்கூடாத தவறுகள்
முக்கியமான இடங்களில் பதிவு செய்வது, விண்ணப்பம் பூர்த்தி செய்வது தவிர்த்து, உங்களது ஆதார் சம்பந்தமான ஓடிபி (OTP)-ஐ யாரிடமும் பகிரவேண்டாம். அதாவது மோசடி செய்பவர்கள் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட சேவைகளை அணுகலாம் அல்லது தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உங்கள் ஏடிஎம் பின் போலவே, உங்கள் OTP-ஐ எப்போதும் தனிப்பட்டதாக வைத்திருங்கள்.
உங்கள் ஆதார் கார்டை ஷேர் செய்யும் சூழல் வந்தால், பெரும்பாலும் மாஸ்க்ட் ஆதார் (masked aadhar) கார்டை பயன்படுத்துவது நல்லது. இதில் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும். குறிப்பாக ஆதார் அட்டையை தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தை இது குறைக்கிறது
முக்கியமான ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வைப்பது நல்லது. ஆன்லைன் மோசடி பேர்வழிகள் உங்களது ஆப்களை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே தான் ஆன்லைன் ஆப்களில் ஆதார் கார்டை லாக் செய்து வைக்க வேண்டும்.
ஆன்லைனில் ஆப்களில் உங்களது பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வது நல்லது. மேலே கூறிய காரணம் தான் இதற்கும்.
சமூக ஊடகங்களில் ஆதார் விவரங்களைப் பகிர்வது அல்லது பாதுகாப்பற்ற ஆன்லைன் தளங்கள் மூலம் ஆதார் தகவல்களை அனுப்புவது மிகுந்த ஆபத்தானது. உங்கள் ஆதார் அட்டையின் ஒரு புகைப்படம் கூட தவறாகப் பயன்படுத்தப்படலாம். எனவே ஆன்லைனில் ஆதார் தகவலைத் தெரியாமல் கூட ஷேர் செய்துவிடக் கூடாது.
ஆதார் கார்டு குறித்து கூடுதல் செய்தி
சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகலின்படி, ஆதார் அட்டையில் பெயர் திருத்தம் மேற்கொள்ள இனி பான் (PAN) கார்டு சரியான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஆதார் அட்டையில் சில தவறுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், பொதுமக்கள் அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், பிறந்த தேதி, புகைப்படங்களை மாற்றுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. அதுவும் ஆதார் கார்டு திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் பள்ளி கூடங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தற்போது இந்த ஆதார் சேவை மையங்களை அணுகி தான் திருத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்ள சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களில் இருந்து பான் கார்டை நீக்கியுள்ளது ஆதார் ஆணையம். எனவே இனிமேல் பான் கார்டை கொண்டு பொதுமக்கள் பெயர் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.