இனி UPI மூலம் ரூ.2,000க்கு மேல் அனுப்ப முடியாது
ஆன்லைன் மோசடிகளை தடுக்க UPI பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி UPI மூலம் தனி ஒரு நபருக்கு முதல்முறை பணம் அனுப்பும்போது அதிகபட்சமாக ரூ.2,000 மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் பணம் அனுப்ப வேண்டுமென்றால் 4 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.
ஆனால், கடைகளில் பொருட்களை வாங்கும்போது இந்த கட்டுப்பாடு கிடையாது. இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.