இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு தள்ளி வைப்பு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வாலாறு காணாத பெருமாழயின் காரணமாக சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் இன்று (11-12-2013) அரையாண்டுத் தேர்வுகள் தொடகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கனமழை காரணமாக புத்தகங்கள் இழந்த மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் இன்று திங்கள்கிழமை (11.12.2023) தொடங்கவிருக்கும் நேர்வுகளை புதன்கிழமை (13.12.2023) அன்று தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதனடிப்படையில் அரையாண்டுத் தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது
இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கள்கிழமை - 11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (செவ்வாய்க்கிழமை - 12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது