பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தினால் மாணவர்களின் நிலை?
ஒரு அலுவலத்திற்குள் எதிர்பாராதவிதமாக ஒரு புலி ஒன்று புகுந்துவிட்டது அங்குள்ள கழிவறைக்கு சென்றது அங்கு மேலாளர் இருந்தார் பசியுடன் வந்த புலி மேலாளரை அடித்து தின்றுவிட்டது. ஆனால் மேலாளரை யாரும் தேடவில்லை, அடுத்ததாக முதன்மை மேலாளரை அடித்து தின்றது, அவரையும் யாரும் தேடவில்லை. பின்னர் அந்த அலுவலகத்தின் அலுவலக உதவியாளரை (Office Boy) அடித்து தின்றது அடுத்த 10வது நிமிடம் ஒட்டு மொத்த அலுவலகமுமே அவரைத் தேட ஆரம்பித்தது பின்னர் கழிவறையில் Office Boy ஐ புலி அடித்து தின்றது கண்டுவிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது.
இந்த கதையிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது களப்பணியாளர்கள் மிகவும் முக்கியம் எல்லா இடத்திலும் களப்பணியாற்றுபவர்களால் மட்டுமே அந்த அலுவலகம் சிறப்பாக இயங்கும் என்பது 100% உண்மை
தமிழகம் முழுவதும் 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் அளிக்கப்படும் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர் பணி என்பது முழுக்க முழுக்க உளவியல் சார்ந்தது. 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் நிச்சயமாக அந்த மாணவர்களின் மனநிலை அங்குள்ள சமுதாய சூழல் மாணவர்களிடம் அனுகும் முறை ஆகியவை மிகச்சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர் குறைந்தது 6 முதல் 8 பேர் பணியாற்றுவார்கள் அநேகமாக உள்ளூர் வாசியாக இருப்பார்கள் அல்லது பக்கத்து ஊரைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் அவர்களை அப்பள்ளியிலிருந்து மாற்றிவிட்டால் அப்பள்ளியின் நிலை? ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மன உளைச்சலைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது. இதனால் மாணவர்களின் நலன் கெடும் என்பது சிறிதளவும் ஐயமில்லை.
அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின் வீட்டருகில் உள்ள பள்ளி கிடைக்காது குறைந்தது 30 முதல் 50 கிமீ வரை பயணம் செய்ய வேண்டியிருக்கும். இதில் 55 வயதைக் கடந்தவர்களும் இருப்பார்கள். தெளிவாக சிந்தனையுடன் இருக்கும் ஆசிரியர்களால் மட்டுமே தெளிவான மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,ஆட்சியாளர்கள், அலுவலர்கள் அவர்களை சிறப்பாக செதுக்க சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர்களால் மட்டுமே முடியும்.
இந்த நடைமுறை உயர் அதிகாரிகளுக்கும் மற்ற துறை அதிகாரிகளுக்கு வேண்டுமானால் சரியாக வரலாம் ஆனால் கல்வித்துறையைத் தாங்கி களப்பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சரியாக வருமா என கல்வித்துறையும் அரசும் சிந்திக்வேண்டும். மாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை பிறப்பிக்கும்போது 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் என்பதை கைவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால் மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.
மாணவர்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் மனதின் வெளிப்பாடு