திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சீரிய முயற்சியால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக Online Test இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வி வாரியத்தில் மாணவர்களுக்கு இணைய வழி (Online test) மூலம் தேர்வுகள் நடத்தப்பெற்று வருகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இத்தகைய வசதி இதுவரையில் எவராலும் செய்ய இயலவில்லை. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் மீது எப்பொழுதுமே தனி கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அனைவரும் அறிந்தததே. இன்னும் அவர்களை எவ்வாறு முன்னேற்றலாம் என்று அயராது சிந்தித்துக்கொண்டிருக்கும் அவரின் சீரிய முயற்சியால் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிக்கு இணையாக Online test நடத்த முயற்சி மேற்கொண்டு அதனை சாதித்து காட்டியுள்ளார். அன்னாரின் கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளுக்கு இடையில் அரசு பள்ளி மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்போட கூடிய அக்கறையினால் அவர் முன்னெடுத்துள்ள இந்த சேவைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
Online test எவ்வாறு உள்நுழைந்து தேர்வெழுதுவது என்பதை விரியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள வழி முறைகளின் படி மாணவர்கள் தேர்வினை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here https://tiruvannamalai.nic.in/
மேலே உள்ள Link ஐ Click செய்தவுடன்
You are being redirected to an external website. Please note that Tiruvannamalai District, Govt. of Tamil Nadu cannot be held responsible for external websites content & privacy policies. என தோன்றும் அதில் OK என்பதை Click செய்யவும் . அடுத்த tab இல் தோன்றவில்லை எனில் Address bar இன் வலது மூலையில் உள்ள செவ்வக வடிவ கட்டத்தில் Click செய்து continue allowing என்பதை Click செய்து Refresh button ஐ சொடுக்கவும்.மீண்டும் முயற்சி செய்தால் open ஆகிவிடும்