18வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கோவாக்சின்!
சிறுவர்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து, இரண்டு கட்ட பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.
நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன.
இதற்கிடையே, 12 - 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்காக குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த, சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு, டி.சி.ஜி.ஐ எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், 2 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துதுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளது.