இலவச மடிகணினி கல்வி அமைச்சர் உறுதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி அவர்களளின் வினா? கடந்த ஆட்சியில் 2017 - 2018ம் ஆண்டு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'லேப்டாப்' வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில், கல்வியாண்டு துவங்கும் காலத்திலேயே, அதை வழங்கினால், மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
அமைச்சர் மகேஷ் அவர்களின் பதில் : தமிழகத்தில், முதலில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது.கடந்த 2018 - 19முதல், பிளஸ் 1மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்கப்படுகிறது. இதுவரை 45.71 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 6,349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளாக, 1.75 லட்சம் மாணவ --- மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவது நிலுவையில் உள்ளது. ஒட்டு மொத்தமாக, 11.72 லட்சம் லேப்டாப் வழங்க வேண்டி உள்ளது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உரிய நேரத்தில், லேப்டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.