ஓவர்டைம் படி ரத்து : மத்திய அரசு அதிரடி
அரசு ஊழியர்களுக்கு, 'ஓவர் டைம்' எனப்படும், பணி நேரத்தை விட கூடுதலான நேரம் பணியாற்று வோருக்கான, படி வழங்குவதை நிறுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷன் அளித்துள்ள பரிந்துரை அறிக்கையில், 'ஆப்ரேஷனல் ஸ்டாப் எனப்படும், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தவிர, மற்றவர்களுக்கு, 'ஓவர் டைம்' படிகள் வழங்குவதை நிறுத்தலாம்' என, கூறப்பட்டுள்ளது.சில ஆண்டுகளில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.இந்த பரிந்துரையை, மத்திய பணியாளர் துறை அமைச்சகம் ஏற்று, பணி நேரத்துக்கு கூடுதலான நேரத்தில் வேலை செய்வதற்கு வழங்கப்படும் படிகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் பணிகளில் ஈடுபடுவோர் உள்ளிட்ட ஊழியர்கள் பட்டியலை தயாரிக்கும்படி, மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.