கல்லூரி மாணவியர் ஜீன்ஸ் அணிய தடை
ராஜஸ்தான் கல்லுாரி மாணவியர், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து, சல்வார் கமீஸ் அல்லது புடவை அணிந்து தான், கல்லுாரிக்கு வர வேண்டும்என்றும், 'ஜீன்ஸ்' போன்ற ஆடைகள் அணியக் கூடாது என்றும், மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
ராஜஸ்தானில், முதல்வர்வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில கல்லுாரி கல்வி கமிஷனரிடம் இருந்து, அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கும், நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.அதன் விபரம்:வரும் கல்வியாண்டில் இருந்து, கல்லுாரி மாணவியர், ஜீன்ஸ் போன்ற உடையணிந்து கல்லுாரிக்கு வர, தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாணவியர், சல்வார் கமீஸ் அல்லது புடவை அணிந்து வர வேண்டும். மேலும், அனைத்து கல்லுாரி மாணவ - மாணவியருக்கும், சீருடை வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மாநில அரசின் இந்த உத்தரவுக்கு, அனைத்து கல்லுாரி மாணவ - மாணவியர், பேராசிரியர்கள் சார்பில், கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.